பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு..
#CaptainNews |
#TamilNews |
#பஞ்சாப்
பஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.பஞ்சாப் குர்டாஸ்பூரில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு வேதனை அளிப்பதாகவும், நிவாரண முயற்சிகளும், மீட்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு.. camera iphone 8 plus apk | |
5 Likes | 5 Dislikes |
101 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 4 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét