மேட்டூர் அணை இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும்!
#Metur_Dam #CaptainNews | #TamilNews
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை இன்று மாலைக்குள் அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்.கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.கபினி அணையிலிருந்து விநாடிக்கு 15000 கன அடி வீதமும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 40000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ளது. தண்ணீர் வரத்து தொடரந்து அதிகரித்து கொண்டே வருவதால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே முதலமைச்சரின் ராசியால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கூறியுள்ளார். மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி திறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவை விரைவாக எட்டக்கூடும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் அணையை ஒட்டியுள்ள மக்கள், கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

மேட்டூர் அணை இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும்! camera iphone 8 plus apk | |
6 Likes | 6 Dislikes |
95 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 6 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét