ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.
#CaptainNews |
#TamilNews |
#ப.சிதம்பரம்
அமலாக்கத்துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை பெற்றது. இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என கோரி முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 20-ஆம் தேதி நீதிபதி தள்ளுபடி செய்யவே, ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து,நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டியதால், முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். அவரை செப்டம்பர் 5 வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதனால் சி.பி.ஐ. காவல் முடிவடையும் நிலையில் அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி. camera iphone 8 plus apk | |
1 Likes | 1 Dislikes |
19 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 5 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét