விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
#விநாயகர்_சதூர்த்தி #CaptainNews | #TamilNews
விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப் பட்டது.இதனை யொட்டி, கோயில்கள் வீடுகளி மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி சேலம்,நாமக்கல்,தருமபுரி ,மாவட்டங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைகள் மேட்டூர் காவிரி ஆற்றில் கரைத்து வருகின்றனர்.நேற்று ஓரு நாள் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப் பட்டன.அருப்புக்கோட்டையில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட வினாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பந்தல்குடி சாலையில் உள்ள பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் வினாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் விருத்தாசலம் அருகே 1000 -த்திற்கு மேற்பட்ட காவலர்கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. விநாயகர் செல்லும் வழியில் மசூதிகள் இருந்ததால், சாலையின் இருபுறங்களிலும், ஒன்றன் பின் ஒன்றாக வந்த ஒவ்வொரு சிலைக்கும் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுப்பட்டனர். திருவையாறு மற்றும் மேலதிருப்பந்துருத்தி கண்டியூர்ää நடுப்படுகை, அந்தணர்குறிச்சி, போன்ற ஊர்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வினாயகர் சிலைகள் இசைநிகழ்ச்சியுடன் வீதியுலாகாட்சி நடந்தது.இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவேரி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். இதேபோல் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மினி ஆட்டோவில் ஊர்வலமாக எடுத்து சென்று கல்குவாரி நீரில் கரைக்கப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. camera iphone 8 plus apk | |
5 Likes | 5 Dislikes |
104 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 6 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét